திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தமிழகத்தில் அதிகரித்து வரும் அரிசி விலை: பொன்னி கிலோ ரூ.80 ஆக உயர்வு என வியாபாரிகள் தகவல்!

athibantv by athibantv
ஜூலை 23, 2026
in Business
A A
0
rice
📢 WhatsApp Channel Join
👁️ 4.8K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தமிழகத்தில் அதிகரித்து வரும் அரிசி விலை: பொன்னி கிலோ ரூ.80 ஆக உயர்வு என வியாபாரிகள் தகவல்!

சென்னை: ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நெல் விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரிசி விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சாதம், இட்லி, தோசை, பிரியாணி முதல் பல்வேறு பாரம்பரிய பலகாரங்கள் வரை அரிசி பிரதான உணவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனையான பொன்னி அரிசி தற்போது உயர்ந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பாபட்லா மற்றும் ஆர்என்ஆர் ரக அரிசிகள் ரூ.55-லிருந்து ரூ.70 ஆகவும், பிரசித்தி பெற்ற சீரக சம்பா அரிசி கிலோ ரூ.120-லிருந்து ரூ.200 ஆகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் 25 கிலோ அரிசி மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.375 வரை விலை அதிகரித்துள்ளது.

Related posts

BSNL INDIA 14 08 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1-க்கு சிம் கார்டு; பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் அறிவிப்பு

ஆகஸ்ட் 14, 2026
Gold price

தொடர் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சரிவு: சென்னையில் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

ஆகஸ்ட் 14, 2026

தமிழகத்தின் அரிசி தேவையை பெரும்பாலான அளவில் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களே பூர்த்தி செய்து வருகின்றன. இந்நிலையில் பருவமழை பொய்த்தது மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு ஆகியவற்றால் அங்கு நெல் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் விளையும் அரிசி பெரும்பாலும் பொது விநியோகத் திட்டத்திற்கே செல்வதால், வெளிச்சந்தையில் அரிசிப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளதாக திருவல்லிக்கேணி அரிசி வியாபாரி பாலசண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட நெல், அரிசி வியாபாரிகள் சங்க கௌரவத் தலைவர் ஸ்ரீராம் மணி கூறுகையில், “கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் உள்ளூரிலும் நெல் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.1,700-க்குக் கிடைத்த ஒரு மூட்டை நெல், தற்போது பற்றாக்குறையால் ரூ.2,400 வரை உயர்ந்துள்ளது. நெல் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் அரிசி விலையும் உயர்ந்துள்ளது; நிலைமை சீராகாவிட்டால் அடுத்த மாதத்தில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Business

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’
  • ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை: சாத்தியமா? எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
  • விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும்; தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்: திருமாவளவன்
  • குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்
  • அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்
  • பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்
  • அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: ஆகஸ்ட் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு
  • பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்; ஸ்மிருதி இரானிக்கு முக்கியப் பொறுப்பு
  • ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • தஞ்சாவூரில் பதாகை அகற்றியதால் விசிகவினர் சாலை மறியல்; எஸ்ஐயை தாக்கிய இளைஞர் கைது
Chief Minister Vijay’s announcement in the Legislative Assembly

கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: முதல்வர் விஜய் சார்பில் ‘சாரி’

ஆகஸ்ட் 17, 2026
Trump 344

ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை: சாத்தியமா? எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஆகஸ்ட் 17, 2026
VCK as the ruling party in Tamil Nadu Thirumavalavan vows at the conference

விசிகவும் தவெகவும் இணைந்து பயணிக்கும்; தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக வளர வேண்டும்: திருமாவளவன்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp