செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்

athibantv by athibantv
ஆகஸ்ட் 17, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Premalatha mdmk
📢 WhatsApp Channel Join
👁️ 1.7K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும், விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்டார். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை தவெக அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related posts

Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026

அரசு மருத்துவமனைகளில் எலிகள் பிரச்சினை இருப்பதாகவும், மருத்துவமனைகளின் சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பிரேமலதா தெரிவித்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவக் கட்டமைப்புகளை அரசு தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தவெக அரசு 100 நாட்களை கடந்துள்ள நிலையில், “மாற்றம்” என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் என கேள்வி எழுப்பிய பிரேமலதா, 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் புழக்கமே முக்கிய காரணம் என்றும், இளைஞர்கள்தான் தவெக ஆட்சியை கொண்டு வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலமே சட்டப்பேரவை இயங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், காலம் காலமாக அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்வதாகவும், ஆனால் மக்களின் பிரச்சினைகள் குறித்து போதிய அளவில் பேசப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருவதாக கூறிய பிரேமலதா, பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி வழங்குவது போல் இருப்பதாக விமர்சித்தார். எனவே, விவசாயிகளின் முழுமையான கடன் தள்ளுபடியை முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் பயன்பாட்டால் மனிதர்கள் வன்முறையில் ஈடுபடும் நிலை ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே சக மாணவர்களைக் கூட தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் பிரேமலதா கூறினார். இதைத் தடுக்க போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வந்து, அதன் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
  • தமிழ் ஹாக்கி லீக்: தயாந்த் வீரன்ஸை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐசிஎஃப் அணி
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
US-Iran conflict pause

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp