திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

வரலாறு படைக்கும் தங்க விலை: பவுன் ரூ.77 ஆயிரம் கடந்தது – கிராம் ரூ.10 ஆயிரம் நெருங்கியது

athibantv by athibantv
செப்டம்பர் 2, 2025
in Business
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.1K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

வரலாறு படைக்கும் தங்க விலை: பவுன் ரூ.77 ஆயிரம் கடந்தது – கிராம் ரூ.10 ஆயிரம் நெருங்கியது

சென்னையில் தங்க விலை ஒரே நாளில் ரூ.680 உயர்ந்து, பவுனுக்கு ரூ.77 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் மூலம் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தங்கம் தொட்டுள்ளது. திடீர் உயர்வு நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைதல் போன்றவை தங்க விலை ஏற்றத்துக்கு காரணமாகின்றன. பங்கு சந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான விருப்பமாக தங்கத்தில் பணத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

Related posts

BSNL INDIA 14 08 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1-க்கு சிம் கார்டு; பிஎஸ்என்எல் புதிய சலுகைகள் அறிவிப்பு

ஆகஸ்ட் 14, 2026
Gold price

தொடர் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சரிவு: சென்னையில் பவுனுக்கு ரூ.1,440 குறைவு

ஆகஸ்ட் 14, 2026

கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் பவுன் தங்கம் ரூ.58,000 மட்டுமே இருந்தது. பின்னர் போர் பதற்றம் உள்ளிட்ட சூழ்நிலையால் விலை அதிகரித்து, ஆகஸ்ட் 8-ம் தேதி பவுனுக்கு ரூ.75,760-ஐ எட்டியது. அதன் பின் சிறு ஏற்ற, இறக்கங்கள் இருந்தபோதிலும், ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, ஆகஸ்ட் 29-ம் தேதி வரலாற்றில் முதன்முறையாக ரூ.76,000-ஐ கடந்தது.

அதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ரூ.76,960-ல் நிலைத்திருந்த தங்கம், நேற்று மீண்டும் உயர்ந்து பவுனுக்கு ரூ.77,640-க்கு, கிராமுக்கு ரூ.9,705-க்கு விற்பனையானது. அதாவது, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680, கிராமுக்கு ரூ.85 உயர்ந்தது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.84,696-க்கு விற்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பவுனுக்கு ரூ.75,120 இருந்த நிலையில், வெறும் 5 நாட்களில் ரூ.2,520 உயர்ந்துள்ளது.

விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, நகை வாங்க விரும்புபவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதே நேரத்தில், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.136-க்கும், கிலோ பார் வெள்ளி ரூ.2,000 அதிகரித்து ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரி மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை தங்க விலை வரலாறு காணாத உயர்வை எட்டச் செய்த முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Business

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்
  • அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்
  • பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்
  • அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு: ஆகஸ்ட் 19-க்கு விசாரணை ஒத்திவைப்பு
  • பாஜக புதிய தேசியத் தலைவர் நிதின் நபின் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்; ஸ்மிருதி இரானிக்கு முக்கியப் பொறுப்பு
  • ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • தஞ்சாவூரில் பதாகை அகற்றியதால் விசிகவினர் சாலை மறியல்; எஸ்ஐயை தாக்கிய இளைஞர் கைது
  • அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சுய விருப்பத்தை உறுதி செய்த பிறகே ஏற்றேன் என சபாநாயகர் விளக்கம்
  • பிஹார் அசோக் தாம் கோயிலில் மின்கம்பி அறுந்ததால் கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு
  • பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் அதிருப்தி: முதல்வர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என விவசாயிகள் சங்கம்
Renaming Kerala to ‘Keralam’

குடியரசுத் தலைவர் ஒப்புதல்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என பெயர் மாற்றம்

ஆகஸ்ட் 17, 2026
Premalatha mdmk

அரசு மருத்துவமனைகளில் வசதிகளை மேம்படுத்தி, போதைப்பொருளை ஒழிக்க கடும் சட்டம் தேவை என பிரேமலதா வலியுறுத்தல்

ஆகஸ்ட் 17, 2026
Rupkumari Chaudhary. Vanathi Srinivasan.

பாஜக புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: வானதி சீனிவாசனுக்கு பதிலாக ரூப்குமாரி சவுத்ரி நியமனம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp