செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

குறைந்த செலவில் உலக தரத்தில் சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கும் மலையாள சினிமா!

athibantv by athibantv
செப்டம்பர் 3, 2025
in Cinema-stories
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.3K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

குறைந்த செலவில் உலக தரத்தில் சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கும் மலையாள சினிமா!

சூப்பர் ஹீரோ மற்றும் ஃபேண்டசி கதைகள் உலகம் முழுவதும் எப்போதுமே சிறப்பான வரவேற்பைப் பெற்றவை. சாதாரண மனிதரால் செய்ய இயலாத காரியங்களை, அசாதாரண சக்திகளைக் கொண்ட ஒருவன் செய்துகாட்டுவதை திரையில் பார்ப்பது தனித்துவமான சுவாரசியம் தருகிறது. ஹாலிவுட் பல தசாப்தங்களாக காமிக்ஸ் வழியே அறிமுகமான சூப்பர் ஹீரோக்களை இன்று வரை உயிரோடு வைத்திருக்கிறது.

அமெரிக்காவின் டிசி, மார்வெல் காமிக்ஸ்கள் மூலம் உருவான சூப்பர் மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் போன்ற பாத்திரங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதன்பின் அயர்ன்மேன், கேப்டன் அமெரிக்கா, வோல்வரின், டெட்பூல் போன்ற ஹீரோக்கள் இந்தியாவிலும் அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்றனர்.

Related posts

vijai

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆகஸ்ட் 17, 2026
Dhurandhar 2026

2026-ல் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத திரைப்படம் ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸ் தகவல்

ஆகஸ்ட் 8, 2026

இந்தியாவில் கூட சூப்பர் ஹீரோ காமிக்ஸ் 80களிலிருந்தே பிரபலமாக இருந்தன. நாகராஜ், டோகா, சூப்பர் கமாண்டோ துருவா போன்ற காமிக்ஸ் கதாபாத்திரங்களும், 90களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சக்திமானும் மக்கள் மனதில் இருந்தனர். ஆனால் அவற்றை பெரிய திரையில் காட்சிப்படுத்தும் முயற்சி வெற்றிகரமாக நடக்கவில்லை. சோனி நிறுவனம் சக்திமான் கதைப்படி ஒரு முழுநீள படம் எடுக்கத் திட்டமிட்டாலும் அது நிறைவேறவில்லை.

ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘க்ரிஷ்’ இந்திய சூப்பர் ஹீரோ படங்களில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ‘க்ரிஷ் 3’ நல்ல வரவேற்பு பெற்றாலும் அதன் தொடர்ச்சி முயற்சி செய்யப்படவில்லை. அதேபோல் தென்னிந்தியாவில் தமிழில் ‘முகமூடி’, ‘கந்தசாமி’, ‘ஹீரோ’, ‘வீரன்’, ‘மாவீரன்’ போன்ற சில முயற்சிகள் நடந்தாலும் பெரிதாகச் செல்வாக்கை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு பேசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடித்த ‘மின்னல் முரளி’ உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. கொரோனா காலத்தில் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்ததால் சர்வதேச பார்வையாளர்களையும் சென்றடைந்தது. மின்னல் தாக்கத்தால் அசாதாரண சக்திகளைப் பெறும் ஒருவன், அதற்கு எதிரான வில்லன் – இந்த எளிய கதைக்களத்தைக் கொண்டு பேசில் ஜோசப் கவர்ச்சியான திரைக்கதை வடித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் நாட்டுப்புற அடையாளம். கேரள சினிமாவின் நெஞ்சோடு ஒட்டியிருக்கும் “நேட்டிவிட்டி”யை சூப்பர் ஹீரோ கதையிலும் பேணி வந்தது சிறப்பானது. அதற்குப் பிறகு ரசிகர்கள் தொடர்ந்து ‘மின்னல் முரளி 2’ குறித்து கேட்டு வருகின்றனர்.

இதே வரிசையில், சமீபத்தில் வெளிவந்த ‘லோகா: சாப்டர் 1’ மலையாள சூப்பர் ஹீரோ படம் வசூலிலும் விமர்சனத்திலும் வெற்றி பெற்றுள்ளது. கேரளாவின் தொன்மக் கதைகளில் வரும் பாத்திரங்களை நவீன முறையில் மாற்றி, ஒரு பெண் சூப்பர் ஹீரோவை உருவாக்கியிருப்பது தனிச்சிறப்பு. வலுவான பின்னணி, வலிமையான வில்லன், நாட்டார் கதைகளை இணைத்து மார்வெல் பாணியில் கேமியோ காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

‘டிராகுலா’ முதல் ‘ட்விலைட்’, ‘சின்னர்ஸ்’ வரை ஹாலிவுட் கசக்கிப் பிழிந்த வேம்பயர் கதைகளை, இந்திய பார்வையாளர்களுக்குத் தகுந்தவாறு ‘யட்சி’ எனப் புதிய வடிவில் தருவது புத்திசாலித்தனமான முயற்சி.

இந்தியாவின் பல மொழிச் சினிமாக்கள் பான்–இந்தியா ஆக்ஷன் படங்களுக்கு நூறு கோடிகள் செலவழித்து கொண்டிருக்கும் வேளையில், மலையாள சினிமா குறைந்த செலவிலேயே உலக தரத்தில் சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கி வருகிறது. ‘மின்னல் முரளி’ பட்ஜெட் ரூ.18 கோடிதான்; ‘லோகா’ பட்ஜெட் ரூ.30 கோடிதான். ஆனால் தரத்தில் ஹாலிவுட் படங்களுக்குச் சமமாகவே இருக்கின்றன.

சாத்தன், அவரது 389 உடன்பிறப்புகள், மாடன் போன்ற நாட்டார் கதைப்பாத்திரங்களின் பிணைப்புகளும், முழு படத்துக்கும் காமிக்ஸ் புத்தகம் வாசிப்பதுபோல ஒரு அனுபவத்தையும் தருகிறது. வன்முறையையும் சண்டையையும் மட்டுமே நம்பாமல், கேரள மக்களின் வாழ்வியலைச் சுற்றி கதாபாத்திரங்களை உருவாக்கி, ஒரு தனி யுனிவர்ஸ் நோக்கி செல்கிறது மலையாள சினிமா.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema-stories

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
  • காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்
  • இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026
Protest demanding Imran Khan’s release

இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp