செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

athibantv by athibantv
ஆகஸ்ட் 18, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Nainar Nagendran’s criticism
📢 WhatsApp Channel Join
👁️ 1K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

முதல்வர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கான பணிகள் தொடர்பான டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கான டெண்டர்களில் ஏராளமான விதிமீறல்கள் இருப்பதாகவும், முறைகேடுகள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026
Protest demanding Imran Khan’s release

இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 18, 2026

தலா ரூ.2.41 கோடி, ரூ.2.01 கோடி மற்றும் ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில், ஏ, பி, சி என 3 பிரிவுகளை உள்ளடக்கிய 3 டெண்டர்களுக்கான அறிவிப்பு கடந்த 13-ம் தேதி நாளிதழ்களில் விளம்பரப்படுத்தப்பட்டதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விதிகளின்படி, டெண்டர் அறிவிப்பு அடுத்த நாளே இணையதளத்திலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் 17-ம் தேதிதான் டெண்டருக்கான ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த காலதாமதத்துக்கான காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட டெண்டர் ஆவணங்களில் மதிப்பீடுகள் தொடர்பான விவரங்கள் இடம்பெறாதது ஏன் என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். “நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள்” என்று கூறும் முதல்வர் விஜய், இந்த டெண்டர் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்காதது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.

ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க 30 நாட்கள் வரை காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற நிலையில், இந்த டெண்டர்களுக்கு மட்டும் ஏன் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒப்பந்ததாரர் யார் என்பதை முடிவு செய்வதற்கு முன்பாகவே, எதன் அடிப்படையில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டன என்றும் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார். இதுதொடர்பான கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெண்டர் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் அனைத்தும் வீண் வதந்திகள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தால், அதற்கான ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
  • காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்
  • இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026
Protest demanding Imran Khan’s release

இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp