செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

athibantv by athibantv
ஆகஸ்ட் 18, 2026
in Political, India, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Karnataka Minister details the killing of three Tamils.
📢 WhatsApp Channel Join
👁️ 3.4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் கர்நாடகாவில் பல ஆண்டுகளாக வசித்து வந்த கன்னடர்களே என்றும், கர்நாடக மாநில விவகாரத்தில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும் என்றும் அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த சம்பவம் கர்நாடகாவைச் சேர்ந்த விவகாரம் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது பணியை செய்யட்டும் என்றும் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தமிழர்களாகவோ அல்லது வேறு சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கலாம் என்றும், அவர்கள் அனைவரும் தங்களது பார்வையில் கன்னடர்களே என்றும் அவர் கூறினார்.

Related posts

A student who achieved the feat of obtaining the CA qualification at the age of 16.

16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை

ஆகஸ்ட் 18, 2026
TTV Dhinakaran

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்

ஆகஸ்ட் 18, 2026

பல பத்தாண்டுகளாக அவர்கள் கர்நாடகாவிலேயே வசித்து வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வரும் 21 அல்லது 22-ம் தேதிகளில் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை அறிக்கை வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தங்களது துறை அதிகாரிகள் தவறு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமலிங்க ரெட்டி உறுதியளித்தார். இதற்கு உதாரணமாக, தேர்தலின்போது விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், ஒரு மாநிலத்தின் உள்விவகாரத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது என்று தெரிவித்திருந்தார். ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடுவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் தன்னால் தலையிட முடியாது என்று குறிப்பிட்ட டி.கே. சிவக்குமார், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தார். தங்களது மாநிலத்தை எவ்வாறு காப்பது என்பது தங்களுக்கு தெரியும் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவர்கள் தங்களது பணியை செய்யட்டும், தாங்கள் தங்களது பணியை செய்வோம் என்றும், மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிட தாம் விரும்பவில்லை என்றும் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். அதேநேரத்தில், கர்நாடக மாநிலத்தின் கண்ணியத்தை காப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மான் வேட்டையாடியதாக கூறி கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழர்களான அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகியோர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர், அவர்களது சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றும், சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Congress-NEWSIndiaPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
Karnataka Minister details the killing of three Tamils.

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி

ஆகஸ்ட் 18, 2026
A student who achieved the feat of obtaining the CA qualification at the age of 16.

16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை

ஆகஸ்ட் 18, 2026
TTV Dhinakaran

முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp