செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 18, 2026
in World, Latest-news-tamil
A A
0
US-Iran conflict pause
📢 WhatsApp Channel Join
👁️ 3.6K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப். 28-ம் தேதி தொடங்கிய போர், ஜூன் 17-ம் தேதி ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் 60 நாட்களுக்குள் விரிவான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என அந்த உடன்பாட்டில் முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த 60 நாள் காலக்கெடு ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

போர் நிறுத்தத்துக்குப் பின்னர் இரு தரப்புக்கும் இடையே நீடித்த பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதி அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முக்கிய விவகாரங்களில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையை சந்தித்தன. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை திறப்பு, அமெரிக்காவின் தடைகள் மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.

Related posts

Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் தனது அணுகுமுறையை மாற்றி சரணடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஈரான் விரும்பும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றும், அமெரிக்காவுக்கு தேவையான வகையிலான ஒப்பந்தமே ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாட்டை பலமுறை மீறியதாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா ஒப்பந்தத்தின் விதிகளை கடைப்பிடிக்காததால், அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் பயன் என்ன என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 60 நாள் காலக்கெடு முடிவடைந்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முழுமையாக தணியவில்லை. ஹார்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினையும் தொடர்ந்து முக்கிய விவகாரமாக இருந்து வருகிறது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
  • தமிழ் ஹாக்கி லீக்: தயாந்த் வீரன்ஸை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐசிஎஃப் அணி
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
US-Iran conflict pause

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp