செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்

athibantv by athibantv
ஆகஸ்ட் 18, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Two hacked to death following a dispute at a temple festival near Kancheepuram heavy police deployment.
📢 WhatsApp Channel Join
👁️ 1.6K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்

காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் ஆடித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

படுநெல்லி கிராமத்தில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் விழாவையொட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் இரவு சுவாமி வீதியுலா புறப்படத் தயாரானபோது, அதே பகுதியைச் சேர்ந்த போதையில் இருந்த சில இளைஞர்கள் ஒலிபெருக்கியில் கானா பாடல்களை ஒலிபரப்பக் கோரி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related posts

Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026

இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு என்கிற சந்திரசேகர் (27), விக்கி என்கிற நீலகண்டன் (28) ஆகிய இருவருக்கும், போதையில் இருந்த பகவதி, கலைச்செல்வன், புஷ்பராஜ் ஆகியோருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த முன்விரோதத்தின் காரணமாக, போதை கும்பலைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்து சந்துரு மற்றும் விக்கி ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உறவினர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முயன்றனர். அப்போது அவர்களது உறவினர்கள் போலீஸாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்காததே இந்த சம்பவத்துக்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் போலீஸார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆடித்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் படுநெல்லி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
  • தமிழ் ஹாக்கி லீக்: தயாந்த் வீரன்ஸை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐசிஎஃப் அணி
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
US-Iran conflict pause

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp