தமிழ் ஹாக்கி லீக்: தயாந்த் வீரன்ஸை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐசிஎஃப் அணி
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் ஐசிஎஃப் மற்றும் ஏஜிஓ அணிகள் வெற்றி பெற்றன.
நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் ஐசிஎஃப் – தயாந்த் வீரன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐசிஎஃப் அணி 5-2 என்ற கோல் கணக்கில் தயாந்த் வீரன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐசிஎஃப் அணியின் சார்பில் துஷால் குமார் மற்றும் புருத்வி ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். கிரண் குமார் ஒரு கோல் பதிவு செய்தார். தயாந்த் வீரன்ஸ் அணிக்காக வெற்றிவேல் மற்றும் முகமது கைஃப் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஏஜிஓ அணி 4-3 என்ற கோல் கணக்கில் பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் அணியை தோற்கடித்தது. ஏஜிஓ அணி தரப்பில் சிரன் மேடப்பா மற்றும் வீரத்தமிழன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.



