செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

காவல் துறையை வைத்து மிரட்டுவது ஜனநாயக நாட்டில் சரியா? என மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேள்வி

athibantv by athibantv
ஆகஸ்ட் 8, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Bail denied to DMK MLA Markandeyan.
📢 WhatsApp Channel Join
👁️ 1.1K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

காவல் துறையை வைத்து மிரட்டுவது ஜனநாயக நாட்டில் சரியா? என மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேள்வி

காவல் துறையை பயன்படுத்தி மிரட்டுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கையா என்று விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 4-ம் தேதி அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீன் நிபந்தனையின்படி தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

Related posts

Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றதால் குறிப்பிட்ட நாளில் காவல் நிலையத்தில் கையெழுத்திட அவர் வரவில்லை. இதையடுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு நேரில் வந்த மார்க்கண்டேயன், அங்கு தனது கையெழுத்தைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக சட்டமன்றமும், மற்றொன்றாக நீதிமன்றமும் இருப்பதாக தெரிவித்தார். சட்டமன்றத்தின் கதவுகள் அடைக்கப்படும் என்று கூறப்பட்டபோது அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதற்கு எதிர்வினையாக தான் கருத்து தெரிவித்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், காவல் துறையை பயன்படுத்தி மிரட்டலாம் என சிலர் நினைப்பதாகவும், இத்தகைய நடைமுறைகள் ஜனநாயக நாட்டில் சரியானதா என்றும் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார். தவெகவினர் செய்யும் தவறுகள் குறித்து பதிவு செய்து வருவதாகவும், அதற்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் மார்க்கண்டேயன் விமர்சித்தார். ஜனநாயகம் பத்திரிகையாளர்களுக்கு மறுக்கப்படும் இடம் விரைவில் வெற்றிடமாக மாறும் என்றும், இதுவே உலக வரலாறு காட்டும் உண்மை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முதல்வர் குறித்து தான் பேசிய விவகாரம் சட்டப்பேரவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்படும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்திருப்பதாக கூறிய மார்க்கண்டேயன், இதுதொடர்பாக ஏற்கெனவே தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவையின் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று தான் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
  • தமிழ் ஹாக்கி லீக்: தயாந்த் வீரன்ஸை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐசிஎஃப் அணி
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
US-Iran conflict pause

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp