செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

செங்கோட்டையன் திமுகவில் சேர்ந்தால் வரவேற்பீர்களா?” – அப்பாவு பதில்

athibantv by athibantv
செப்டம்பர் 5, 2025
in Political, Tamilnadu
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

“செங்கோட்டையன் திமுகவில் சேர்ந்தால் வரவேற்பீர்களா?” – அப்பாவு பதில்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் எப்படிச் செயல்படுவீர்கள் என்ற கேள்விக்கு, தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பதிலளித்துள்ளார்.

திருநெல்வேலியில் வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு கூறியதாவது:

Related posts

Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Arrest 56789

பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது

ஆகஸ்ட் 18, 2026

“மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரியால் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. இப்போது சில வரிகளை குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால் அதனால் மாநில அரசுகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 50 சதவீதம் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்கின்றன. இதை மாற்றி மாநிலங்களுக்கு 75 சதவீதம், மத்திய அரசுக்கு 25 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நீட் தேர்வைப் போன்று ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது முற்றிலும் தேவையற்றது. அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் இந்தத் தேர்வு கட்டாயம் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையாக உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த வித தகுதி விதிமுறையும் கூறப்படவில்லை. ஏற்கனவே பி.எட் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மீண்டும் தேர்வு வைப்பது சரியானது அல்ல. கல்வி மாநில பட்டியலில் இருந்திருந்தால் இத்தகைய சிக்கல்கள் எழுந்திருக்காது,” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, “இது தொடர்பான முடிவை கட்சி தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எடுக்க வேண்டும்” என்று அப்பாவு தெளிவுபடுத்தினார்.

மேலும், எதிர்க்கட்சிக் கூட்டணி உடைந்துவிட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது பற்றிய விளக்கம் உடைத்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் அரசோ, கொள்கை நிலைப்பாட்டுடன் செயல்படும் அரசு” என்று குறிப்பிட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
  • தமிழ் ஹாக்கி லீக்: தயாந்த் வீரன்ஸை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐசிஎஃப் அணி
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
US-Iran conflict pause

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp