செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தவெக எம்எல்ஏ பேரம் பேசப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது; 2.80 கோடி ரூபாய் பணம் பறிமுதல்!

athibantv by athibantv
ஜூலை 19, 2026
in Latest-news-tamil, Crime, Political, Tamilnadu
A A
0
கைது crime
📢 WhatsApp Channel Join
👁️ 305 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தவெக எம்எல்ஏ பேரம் பேசப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது; 2.80 கோடி ரூபாய் பணம் பறிமுதல்!

சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தில் தவெக நிலப்பாட்டிற்கு எதிராக வாக்களிக்க, தனக்கு 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஏற்கனவே 12 பேரைக் கைது செய்திருந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான இந்த ரகசியச் சதித் திட்டத்திற்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தவெக கட்சியின் 15 சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி, ஆட்சியின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சிங்கப்பூரில் இருந்து செயல்பட்ட லட்சுமணபெருமாள் என்பவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தொடர்ச்சியாகக் கொரட்டூரைச் சேர்ந்த பைனான்சியர் கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் வெங்கடேசன் ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்களிடமிருந்து சதித் திட்டத்திற்காக ஹவாலா முறையில் கொண்டு வரப்பட்ட 2.80 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சதித் திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த நரேஷுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கருணாநிதி மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

கைதானவர்களின் செல்போன்கள் சைபர் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இந்தச் சதித் திட்டத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, ஏற்கனவே சிறையில் உள்ள நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், வழக்கு ஆரம்பகட்டத்தில் உள்ளதாலும், ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என்ற காவல் துறையின் வாதத்தை ஏற்றும், நீதிபதி எஸ்.கார்த்திகேயன் அவர்களின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimePoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
  • தமிழ் ஹாக்கி லீக்: தயாந்த் வீரன்ஸை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐசிஎஃப் அணி
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
US-Iran conflict pause

அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp