மாணவர்களை அரசியலுக்காகப் பயன்படுத்தும் காங்கிரஸ்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாடல்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் பேரணிகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்முறையாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களைத் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முடக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய காங்கிரஸ், ஜனநாயக ரீதியிலான விவாதத்திற்குப் பதிலாக அரசியல் நாடகத்தையே தேர்ந்தெடுத்துள்ளது என்றார்.
மேலும், நீட் தேர்வு குறித்து விவாதிக்க அரசு உறுதியுடன் உள்ளதாகவும், மாணவர்களுக்குக் குழப்பத்திற்குப் பதிலாகத் தீர்வுகளும் பொறுப்புணர்வுமே தேவை என்றும் அமைச்சர் பிரதான் குறிப்பிட்டுள்ளார்.



