செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

athibantv by athibantv
ஆகஸ்ட் 18, 2026
in Political, India, Latest-news-tamil
A A
0
D.K. Shivakumar’s appeal
📢 WhatsApp Channel Join
👁️ 3.1K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

“எந்த மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாக விவகாரங்களில் தலையிடக் கூடாது,” என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டி.கே. சிவகுமார், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக் கூடாது என்று தெரிவித்தார். ஓ. பன்னீர்செல்வம் அல்லது வேறு யாராக இருந்தாலும், இந்த அடிப்படை புரிதலை கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related posts

Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் தன்னால் தலையிட முடியாது என்று குறிப்பிட்ட கர்நாடக முதல்வர், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதற்கென தனித்தனி பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்தார். தங்களது மாநிலத்தை எவ்வாறு காப்பது என்பது தங்களுக்கு தெரியும் என்பதை தமிழக தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“அவர்கள் தங்கள் பணியைச் செய்யட்டும்; நாம் நமது பணியைச் செய்வோம்” என்று கூறிய டி.கே. சிவகுமார், மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிட தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், கர்நாடக மாநிலத்தின் கண்ணியத்தை காப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மான் வேட்டையாடியதாக கூறி அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வனத்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர், அவர்களது சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்றும், சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Congress-NEWSIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது
  • அமெரிக்கா-ஈரான் 60 நாள் போர் நிறுத்தம் முடிவு: ட்ரம்ப்-ஈரான் இடையே மீண்டும் பதற்றம்
  • பள்ளி ஆசிரியையை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி கொலை மிரட்டல்: ஜவுளிக்கடை ஊழியர் கைது
  • கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சட்டப்பேரவையில் பாஜக கடும் குற்றச்சாட்டு
  • மாநகர பேருந்துகளில் குத்தகை நடத்துநர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
  • உலகக் கோப்பை ஹாக்கி: இங்கிலாந்திடம் 2-4 என இந்தியா தோல்வி; பாகிஸ்தானுடன் நாளை மோதல்
  • காஞ்சிபுரம் அருகே ஆடித்திருவிழாவில் பயங்கரம்: இருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கும்பல்
  • பெல்ஜியத்தில் கழிவுநீர் குழாய் பணியில் ரூ.98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுப்பு
D.K. Shivakumar’s appeal

மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்

ஆகஸ்ட் 18, 2026
Palaniswami

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஆகஸ்ட் 18, 2026
Links to Pakistani intelligence agency exposed.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது நாடு முழுவதும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டதாக 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp