செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

வங்கதேச மாணவர் போராட்டம் திட்டமிட்ட சதி: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பரபரப்பு குற்றச்சாட்டு

athibantv by athibantv
ஆகஸ்ட் 6, 2026
in World, Latest-news-tamil
A A
0
“The student protests in Bangladesh are a conspiracy against my government” – Sheikh Hasina
📢 WhatsApp Channel Join
👁️ 836 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

வங்கதேச மாணவர் போராட்டம் திட்டமிட்ட சதி: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பரபரப்பு குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டம் தனது ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சங்க நிகழ்ச்சியில் ஒலி வடிவில் தனது கருத்துகளை பகிர்ந்த ஷேக் ஹசினா, கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டம் ஜனநாயக முறையை மீறி புதிய ஆட்சியை உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

மேலும், வரும் டிசம்பர் மாதத்தில் மீண்டும் தனது நாட்டிற்கு திரும்புவேன் என்றும், தனது தேசத்தின் மீதான அன்பு என்றும் குறையாது என்றும் அவர் கூறினார். தன்னை எதிர்த்து பொய்யான மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் மூலம் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கலாம் எனவும், ஆனால் அவை தனது மக்கள் சேவையையும் வாழ்க்கை நோக்கத்தையும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

தனது உரையை தொடங்குவதற்கு முன், தனது தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான், 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் 1975-ம் ஆண்டு ராணுவ கிளர்ச்சியில் கொல்லப்பட்ட உறவினர்களை நினைவுகூர்ந்தார்.

கடந்த 2024-ம் ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசினா தலைமையிலான அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்து பிரதமர் இல்லம் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து, ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் பிஎன்பி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததாகவும், தாரிக் ரகுமான் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவர் போராட்டத்தை அடக்க நடவடிக்கை எடுத்தது தொடர்பான வழக்கில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஷேக் ஹசினாவுக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

மேலும், ஷேக் ஹசினாவை வங்கதேச அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு இந்தியாவிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp