வெற்றிப் பள்ளிகள் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
வெற்றிப் பள்ளிகளின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற இணையவழி ஆய்வுக் கூட்டத்தில், போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட்டு கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
அதன்படி, வெற்றிப் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் மாதந்தோறும் இணையவழியில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பள்ளிகளின் கற்பித்தல் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சனிக்கிழமை பயிற்சி வகுப்புகளின் வருகைப் பதிவு, பாடப் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவும், மாணவர்களுக்குத் தரமான மதிய உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



