கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜூலை 26 அன்று இந்து சமய கலாச்சார பண்பாட்டு வகுப்பு பரிசளிப்பு விழா
அகில பாரத இந்து மகாசபா இந்து தர்ம பாதுகாப்பு பேரவை சார்பில் இந்து சமய கலாச்சார பண்பாட்டு வகுப்பு பரிசளிப்பு விழா – 2026 ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் நடைபெறவுள்ளது.
நாகர்கோவில் தம்பத்துக்கோணத்தில் உள்ள SLS மஹாலில் காலை 9.00 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சிக்கு அகில பாரத இந்து மகாசபா மாநில இணை அமைப்புச் செயலாளர் S.துரைராஜ் தலைமை தாங்குகிறார்.
நிகழ்ச்சியில் இறைவணக்கம், பண்பாட்டு வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமிகளின் ஆசியுரைகளுடன் தலைவர்களின் வாழ்த்துரைகளும் இடம்பெற உள்ளன.
இவ்விழாவில் அகில பாரத இந்து மகாசபா தேசிய துணைத் தலைவரும் தமிழ் மாநிலத் தலைவருமான த.பாலசுப்ரமணியன் எழுச்சியுரையாற்றி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கவுள்ளார்.



