தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் முடிவுகள் வெளியீடு: 23 உறுப்பினர்கள் தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 86 நாட்களுக்குப் பிறகு நேற்று அறிவிக்கப்பட்டு, 23 உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பார் கவுன்சிலின் 23 இடங்களுக்காகக் கடந்த மார்ச் 30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 143 வழக்கறிஞர்கள் போட்டியிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களுக்கான இடஒதுக்கீடும் பின்பற்றப்பட்டது.
முன்னுரிமை அடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட இமுடிவுகளில், சி.பரணிதரன், பி.எஸ்.அமல்ராஜ், இ.பாலமுருகன் உட்பட 18 ஆண் வழக்கறிஞர்கள் புதிய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பெண் வழக்கறிஞர்களுக்கான பிரிவில் டி.பிரசன்னா, ஏ.ராஜேஸ்வரி உட்பட 5 பேர் தேர்வாகியுள்ள நிலையில், எஞ்சிய 2 நியமன பெண் உறுப்பினர்களை உச்ச நீதிமன்றம் விரைவில் நியமிக்கவுள்ளது.



