நில மோசடி வழக்கு: திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி கோயில் இணை ஆணையர் ஆஜரானார்
பழநி கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் விசாரணைக்காக ஆஜராகினர்.
பழநி சந்நிதி வீதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் முருகதாஸ் ஆகியோரின் வீடுகளில் சிபிசிஐடி சோதனைகளை நடத்திய நிலையில், பழநியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும் நேரில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இணை ஆணையர் மாரிமுத்து, கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் எஸ்.பி. சாஜிதா முன்னிலையில் ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆஜரான நிலையில், 6-வது நாளாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.



