தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல் செய்யப்படும்: பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
தமிழகத்தின் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், தொடர்ந்து ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தெரிவித்த சபாநாயகர், பேரவை உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் கைது குறித்து உரிய தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும், முதல்வர் விஜய் பேரவையில் காட்டிய சைகை விதிமுறைகளுக்கு உட்பட்டதே என்றும் விளக்கமளித்தார்.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல இதில் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் நிலவி வருகிறது.
குறிப்பாக, மகளிருக்கான உரிமைத் தொகை ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில் பெண்கள் காத்துக்கொண்டிருக்கும் சூழலில், இந்த நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் எனக் கருதப்படுகிறது.



