மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை: சலிமா டெட்டே தலைமையில் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!
மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் கூட்டு நாடாக நடைபெற உள்ளது. உலக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொடருக்கான 20 பேர் கொண்ட பலம் வாய்ந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனாக நட்சத்திர வீராங்கனை சலிமா டெட்டே தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய மகளிர் அணி ‘டி’ (Pool D) பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆசியாவின் பலத்த போட்டியாளரான சீனா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. தொடரின் விறுவிறுப்பான தனது முதல் லீக் ஆட்டத்தில், வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று இந்திய அணி சீனாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி விவரம்:
- கோல்கீப்பர்கள்: சவிதா புனியா, பிச்சு தேவி ஹரிபாம்.
- டிஃபென்டர்கள் (தடுப்பாட்டம்): இஷிகா சவுத்ரி, சுசீலா சானு புக்ரம்பம், லால்தன்ட்லுவாங்கி, ஜோதி, ஷில்பி தபாஸ்.
- மிட்ஃபீல்டர்கள் (நடுகளம்): நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனெலிடா டோப்போ, சலிமா டெட்டே (கேப்டன்), நேஹா, தீபிகா சோரெங்.
- ஃபார்வேர்டுகள் (முன்களம்): லால்ரெம்சியாமி, ருதுஜா தாதாசோ பிசல், நவ்நீத் கவுர், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங்.



