செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தமிழக பட்ஜெட்டுக்கு மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்: ‘திமுக திட்டங்களின் ரீமேக் வெர்ஷன்’ என குற்றச்சாட்டு

athibantv by athibantv
ஆகஸ்ட் 6, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
dmk stalin dmk
📢 WhatsApp Channel Join
👁️ 2K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தமிழக பட்ஜெட்டுக்கு மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்: ‘திமுக திட்டங்களின் ரீமேக் வெர்ஷன்’ என குற்றச்சாட்டு

தமிழக அரசின் 2026–27-ஆம் ஆண்டுக்கான முதல் வரவு-செலவுத் திட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் புதிய தொலைநோக்கு திட்டங்கள் இல்லாததுடன், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் “ரீமேக் வெர்ஷன்” மட்டுமே என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசு அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். “பிளாஸ்ட்” ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, “வேஸ்ட்” எனக் கூறும் அளவுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளதாகவும், திராவிட மாடல் அரசின் திட்டங்களை மீண்டும் வெளியிட்டதுபோலவே இந்த பட்ஜெட் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மின் கட்டணக் குளறுபடிகள், விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தேர்தல் காலத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, ஆண்டுக்கு ஆறு இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொத்தத்தில், சொந்த சிந்தனை இல்லாத, அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறிய பட்ஜெட்டாக தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாகவும், இதை “ரீல் அரசின் முதல் பட்ஜெட்” என விமர்சித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp