செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தமிழக சுகாதாரத் துறை சீர்குலைந்துள்ளது; அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

athibantv by athibantv
ஜூலை 31, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Nainar Nagendran
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தமிழக சுகாதாரத் துறை சீர்குலைந்துள்ளது; அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தமிழக அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், தரமான மருந்துகள் மற்றும் சிறந்த சிகிச்சை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், ஏழை மற்றும் எளிய மக்களின் உயிர் பாதுகாப்பை அரசு முதன்மையாகக் கருத வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், சமீபத்தில் வெளியான பல்வேறு சம்பவங்கள் மாநிலத்தின் சுகாதாரத் துறையின் தற்போதைய நிலை குறித்து கடும் கேள்விகளை எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்ததாகவும், கோபிச்செட்டிபாளையம் அருகே குழந்தைகள் நல மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததாகவும், தேனி பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் தவறான சிகிச்சையால் 14 வயது சிறுவன் கோமா நிலைக்கு சென்றதாகவும் வெளியாகியுள்ள தகவல்களை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சம்பவங்கள் தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடு குறித்து பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

மேலும், ஆட்சிப் பொறுப்பேற்ற தொடக்கத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறுவோம் என அமைச்சர்கள் உறுதியளித்ததாக நினைவூட்டிய நயினார் நாகேந்திரன், தற்போது அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக விளம்பர நடவடிக்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக விமர்சித்தார். சுகாதாரத் துறையின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் போதிய முன்னேற்றம் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், மாற்றத்தை வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு நிர்வாகத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அடிப்படை பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். குறிப்பாக, சுகாதாரத் துறையில் நிலவும் குறைபாடுகளை சரிசெய்வது அரசின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும் என்றார்.

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை நியமிப்பதுடன், தரமான மருந்துகள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதன்மூலம் ஏழை, எளிய மக்களின் உயிர்களை பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp