செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி: காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம்

athibantv by athibantv
ஜூலை 27, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Manickam Tagore 25
📢 WhatsApp Channel Join
👁️ 1.6K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி: காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026

தமிழக காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்தும் வகையில், அகில இந்திய தலைமை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் இணைப்பது, தொண்டர்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வந்து கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 1-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவிப்பின்படி இந்த பயணம் நடைபெற உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதியை நிலைநாட்டுவது மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து போராடி வரும் ராகுல் காந்தியின் வருகை தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் இலக்குடன் தமிழக காங்கிரஸ் தனது அரசியல் பயணத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் தமிழக வருகை அக்கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Congress-NEWSPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
  • காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்
  • இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026
Protest demanding Imran Khan’s release

இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp