செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

மேகேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தல்

athibantv by athibantv
ஜூலை 26, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Palaniswami
📢 WhatsApp Channel Join
👁️ 2.3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

மேகேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தல்

காவிரி நதிநீர் மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பினும், அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் கூறுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக அரசுக்கு சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் அழுத்தம் கொடுத்து தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத்தர வேண்டிய தமிழக அரசு இதுவரை மவுனமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் கடந்த காலங்களில் பலனளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு காவிரி பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என தெரிவித்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கர்நாடக முதல்வருடன் பெங்களூருவில் சந்தித்து பேசியதாக பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக முதல்வர் விஜய், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறிய நிலையில், மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளதாக பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து முழுமையாக ஆலோசனை நடத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், டெல்டா மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தின் நலனுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும் என்றும், காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை பெற்றுத்தர முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: AdmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp