புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

பாமகவின் 19-வது வேளாண் நிழல் பட்ஜெட் வெளியீடு: ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

athibantv by athibantv
ஜூலை 20, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
பாமக
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

பாமகவின் 19-வது வேளாண் நிழல் பட்ஜெட் வெளியீடு: ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

பாட்டாளி மக்கள் கட்சியின் 2026–2027-ஆம் ஆண்டுக்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் வேளாண் துறைக்கு ரூ.68,000 கோடியும், நீர்வளத் துறை பாசனத் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடியும் ஒதுக்கீடு செய்ய யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026

விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆகவும், கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதைக் கட்டாயமாக்கச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், குறுவை சாகுபடி இழப்புகளுக்கு ஏக்கருக்கு சிறப்பு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பொருளாதாரத்தில் வேளாண் துறையின் பங்களிப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 20 சதவீதமாக உயர்த்தவும், இத்துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை 9 மாவட்டங்களாக விரிவாக்கம் செய்தல், புதிதாக 3 வேளாண் பல்கலைக்கழகங்களை அமைத்தல் மற்றும் தமிழக அரசே புதிய பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 300 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம், புதிய மணல் குவாரிகளை மூடுதல் மற்றும் மேகேதாட்டு அணை முயற்சியை முறியடித்தல் போன்ற சூழலியல் சார்ந்த திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. பாமக தெரிவித்துள்ள இந்த யோசனைகளை வேளாண் பெருமக்களின் கோரிக்கையாகக் கருதி, தமிழக அரசு தனது வரும் நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிறைவேற்ற வேண்டும் என பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
  • காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்
  • இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
Nainar Nagendran’s criticism

முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்

ஆகஸ்ட் 18, 2026
Madurai City Police statement

காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்

ஆகஸ்ட் 18, 2026
Protest demanding Imran Khan’s release

இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp