செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

இடஒதுக்கீடு ரத்து கோரி புதிய போராட்டங்கள் தீவிரம்; இணையம் முதல் கள போராட்டம் வரை வலுக்கும் எதிர்ப்பு

athibantv by athibantv
ஆகஸ்ட் 6, 2026
in India, Latest-news-tamil, Political
A A
0
hindutamil-prod_2026-08-06_0az332t2_ee55ab63-e077-41b7-a1da-9a19998dba20
📢 WhatsApp Channel Join
👁️ 2.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

இடஒதுக்கீடு ரத்து கோரி புதிய போராட்டங்கள் தீவிரம்; இணையம் முதல் கள போராட்டம் வரை வலுக்கும் எதிர்ப்பு

இந்தியாவில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதிய போராட்டங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் தொடங்கிய இந்த இயக்கம் தற்போது பல்வேறு மாநிலங்களில் நேரடி போராட்டங்களாகவும் மாறி வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு அனுமதி கோரி வரும் ஹர்ஷ் துபே இந்த இயக்கத்தின் முக்கிய முகமாக உருவெடுத்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடைபெற்ற காலகட்டத்தில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று கவனம் பெற்றவர் ஹர்ஷ் துபே. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும், சில நேரங்களில் தற்கொலை போன்ற சம்பவங்களுக்கும் காரணமாகிறது என்றும் அவர் விவாதங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதன் மூலம் பல ஊடக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று பிரபலமானார்.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

இதற்கிடையில், ‘Reservation Hatao Andolan’ (RHA) என்ற பெயரில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இயக்கம் உருவாகியுள்ளது. இதே பெயரில் செயல்படும் சமூக வலைதள பக்கத்திற்கு லட்சக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த ஜூலை 30-ம் தேதி ‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ என்ற கோரிக்கையுடன் முதல் பெரிய போராட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என கர்னி சேனா அமைப்பினர் உறுதிமொழி எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் இணையதளத்திலும், அரசியல் களத்திலும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், இந்த இயக்கம் இன்னும் ஒருங்கிணைந்த தேசிய அளவிலான அமைப்பாக உருவெடுக்கவில்லை. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்க ஹர்ஷ் துபே முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், கல்வியாளர் ஆனந்த் ரங்கநாதன், பத்திரிகையாளர் அஜீத் பார்தி, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அனுராதா திவாரி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகள்

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்து, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் தங்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன என பொதுப் பிரிவைச் சேர்ந்த சிலர் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இதனுடன், உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் வகையில் யுஜிசி கொண்டு வந்த புதிய விதிமுறைகளுக்கும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விதிமுறைகள் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என்றும், தவறான குற்றச்சாட்டுகள் மூலம் அவர்களின் கல்வி பாதிக்கப்படலாம் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

யுஜிசியின் புதிய விதிமுறைகள் உருவான பின்னணியில், பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தாத்வி ஆகியோரின் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் முக்கிய காரணமாக அமைந்தன. கல்வி வளாகங்களில் சாதி பாகுபாட்டை தடுக்கும் வகையில் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து யுஜிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டது.

பல மாநிலங்களில் பரவும் போராட்டங்கள்

இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள் தற்போது நாக்பூர், ஜெய்ப்பூர், லக்னோ, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல நகரங்களுக்கு பரவியுள்ளன. லக்னோவில் சவர்ண மோர்சா மற்றும் சவர்ண சமாஜ் அமைப்பினர் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்றும், யுஜிசி விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தில், சாதி அடிப்படையிலான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போலீஸார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சல் மூலம் போராட்டத்தை கலைத்ததாக அமைப்புகள் குற்றம்சாட்டின.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜன ஜாகரன சமிதி சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர்.

இயக்கத்தின் 5 முக்கிய கோரிக்கைகள்

‘இடஒதுக்கீட்டை ரத்து செய்’ இயக்கம் சார்பில் சில முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை:

  • சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு பதிலாக வருமான அடிப்படையிலான இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்.
  • ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே, அதுவும் ஒருமுறை மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • பயன்படுத்தப்படாத இடஒதுக்கீட்டு இடங்களை பொதுப் பிரிவினருக்கு வழங்க வேண்டும்.
  • பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களை இடஒதுக்கீட்டில் இருந்து நீக்க தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும்.
  • கல்வி சமநிலை உருவான பின்னர் இடஒதுக்கீட்டை படிப்படியாக நிறுத்தும் ‘சன்செட் கிளாஸ்’ முறையை கொண்டுவர வேண்டும்.

இருப்பினும், இந்தக் கோரிக்கைகளில் பல அரசியல் மற்றும் அரசியல் சாசன ரீதியாக சிக்கலானவை என்றும், அவை நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலையில், இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் பெரும்பாலும் இணையதள எதிர்ப்பாகவே இருந்து வருகின்றன. ஆனால், இந்த இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்றால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

வரும் ஆண்டுகளில் நடைபெற உள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநில தேர்தல்களில் சாதி மற்றும் இடஒதுக்கீடு விவகாரம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக உத்தரப் பிரதேச அரசியலில் சாதி அடிப்படையிலான கூட்டணிகள் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த புதிய இயக்கத்தின் தாக்கம் அரசியல் ரீதியாக கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Congress-NEWSIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp