செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

athibantv by athibantv
ஜூலை 20, 2026
in India, Latest-news-tamil, Political
A A
0
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
📢 WhatsApp Channel Join
👁️ 2.4K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை சலசலப்புடன் தொடங்கியது. அவை கூடிய சில நிமிடங்களிலேயே நீட் வினாத்தாள் கசிவு, டெல்லியில் நடைபெற்ற சிஜேபி போராட்டக்காரர்கள் மீதான தடியடி மற்றும் ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் குறித்து உடனடி விவாதம் கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இவ்விவகாரங்களை எழுப்பி, ஜனநாயகப் போராட்டங்களை அரசு ஒடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார். இரு அவைகளிலும் அடுத்தடுத்து நிலவிய கூச்சல் குழப்பம் காரணமாக அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டத்தைக் கூட்டுமாறு மாநிலங்களவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாகக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, மழைக்காலக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புவதாகவும், அவையின் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், கத்தாரின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி உள்ளிட்ட மறைந்த பிரபலங்களுக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இடையில் நிலவிய அமளிக்கு மத்தியிலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையைத் தலைமை நீதிபதி உட்பட நிரந்தரமாக 38 ஆக உயர்த்த வகை செய்யும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதாவைச் சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்களுக்கு இடையே இம் மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: IndiaParliamentPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp