செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 17, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Youth Murdered in Neyveli – What Happened
📢 WhatsApp Channel Join
👁️ 1.8K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

நெய்வேலியில் இரு தரப்பினர் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை; 15 நாட்களில் 4 கொலைகளால் அச்சம்

நெய்வேலி இந்திரா நகர் பி2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அமிர்தலிங்கத்தின் மகன் ஆனந்தராஜ் (36) என்பவருக்கும், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று ஆனந்தராஜ் தனது நண்பர்களுடன் நெய்வேலி வட்டம் 2 பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமைந்துள்ள சுடுகாட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோபி, தனது நண்பர்கள் சுமார் 20 பேருடன் 3 கார்களில் சம்பவ இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை எதிர்பாராத ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது கோபி தரப்பினர் ஆயுதங்களைக் கொண்டு ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பரான வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

இந்த தாக்குதலில் நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஆனந்தராஜ் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி நகர போலீஸார், உயிரிழந்த நரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆனந்தராஜ் மற்றும் நரேஷ்குமாரின் உறவினர்கள் நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனை முன்பு திரண்டனர். நரேஷ்குமாரை வெட்டிக் கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் அண்மைய நாட்களிலும் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி சிதம்பரம் அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (43), ராமகிருஷ்ணன் (37) ஆகியோர் நிலத்தகராறு காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆகஸ்ட் 10-ம் தேதி கடலூர் அருகே ரங்கா ரெட்டிப்பாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பான முன்விரோதத்தில் புதுச்சேரி உறுவையாறைச் சேர்ந்த சசிகுமார் (31) வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று நெய்வேலியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நரேஷ்குமார் (26) உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்குள் 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நிகழும் இந்த கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp