செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

பல கோடி ரூபாய் சொத்துத் தகராறு: தாய், தம்பியை கொன்று நாடகமாடிய 2 சகோதரர்கள் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 1, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Brothers arrested for murder
📢 WhatsApp Channel Join
👁️ 4.5K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

பல கோடி ரூபாய் சொத்துத் தகராறு: தாய், தம்பியை கொன்று நாடகமாடிய 2 சகோதரர்கள் கைது

சென்னை அண்ணாநகர் கிழக்கு முதல் அவென்யூ பகுதியில் வசித்து வந்த அஷ்ரப் நிஷா (68), தனது மகன்கள் அப்்ரார் அகமது, அஸ்ரார் அகமது மற்றும் இளைய மகன், பல் மருத்துவரான அசார் அகமது ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிஷாவும், அசார் அகமதும் வீட்டில் மயங்கிக் கிடப்பதாக அப்்ரார் மற்றும் அஸ்ரார் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவப் பணியாளர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

இதையடுத்து அண்ணாநகர் போலீஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உடலில் காணப்பட்ட காயங்களை அடுத்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையிலேயே குடும்பத்தினரின் வாக்குமூலங்களில் முரண்பாடு இருந்ததால், அப்்ரார் அகமது மற்றும் அஸ்ரார் அகமது மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தீவிர விசாரணையில், குடும்பத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை விற்பனை செய்து பங்கீடு செய்வது தொடர்பாக நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவியிருந்தது தெரியவந்தது. அந்த சொத்தை விற்க தாய் அஷ்ரப் நிஷாவும், இளைய மகன் அசார் அகமதும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சம்பவத்தன்று இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த அப்்ரார் அகமது மற்றும் அஸ்ரார் அகமது இருவரும் சேர்ந்து தாய் மற்றும் தம்பியை தாக்கிக் கொலை செய்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு சம்பவம் இயல்பான மரணம் போல தோன்றும் வகையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற இருவரும், சில மணி நேரம் கழித்து மீண்டும் வந்து அவர்கள் மயங்கிக் கிடப்பதாக நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்கில் அப்்ரார் அகமது (50), அவரது மனைவி பசியா ஆஸ்மா (42), அஸ்ரார் அகமது (49) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அப்்ரார் அகமதுவின் மகள் மற்றும் மகன் ஆகியோர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp