செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வழிவகை: மக்களவையில் திருத்த மசோதா நிறைவேற்றம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 6, 2026
in Business, BIGNEWS, India, Latest-news-tamil
A A
0
upi
📢 WhatsApp Channel Join
👁️ 3.5K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வழிவகை: மக்களவையில் திருத்த மசோதா நிறைவேற்றம்

யுபிஐ (UPI) மற்றும் பிற மின்னணு பணப் பரிவர்த்தனை முறைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் வகையிலான வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதமின்றி நிறைவேறியது.

பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007, வருமான வரிச்சட்டம், 2025 மற்றும் நிதிச் சட்டம், 2026 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் இந்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆகஸ்ட் 6) மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடத்த ஆளும் தரப்பு விருப்பம் தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக விவாதம் நடைபெறாமல் குரல் வாக்கெடுப்பின் மூலம் அது நிறைவேற்றப்பட்டது.

Related posts

Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026

இந்த திருத்தத்தின் மூலம், யுபிஐ மற்றும் பிற டிஜிட்டல் கட்டண சேவைகளுக்காக வங்கிகள் மற்றும் சேவை வழங்குநர்கள் கட்டணம் வசூலிக்க அரசால் அனுமதி வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதைத் தடுத்திருந்த சட்டப்பிரிவு நீக்கப்பட உள்ளது.

இதனால், எதிர்காலத்தில் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க சட்டரீதியான வாய்ப்பு உருவாகும். இருப்பினும், தனிநபர்களுக்கு இடையேயான (Person-to-Person) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் பொருந்தாது என்றும், நுகர்வோர்–நிறுவனம் (Consumer-to-Business) மற்றும் நிறுவனம்–நிறுவனம் (Business-to-Business) இடையேயான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான சட்டங்களில் முக்கிய மாற்றங்களுக்கு வழிவகை ஏற்பட்டுள்ள நிலையில், கட்டண வசூல் தொடர்பான இறுதி விதிமுறைகள் குறித்து அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BusinessIndia

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
  • விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • சோளிங்கரில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: தவெக எம்எல்ஏ கபில் மீது வழக்குப்பதிவு
  • கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களும் கன்னடர்களே: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
  • 16 வயதில் உலகின் இளைய சிஏ: துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்யப்பன் கின்னஸ் சாதனை
  • முதல்வர் அறை மாற்ற டெண்டரில் விதிமீறலா? தவெக அரசை டிடிவி தினகரன் விமர்சனம்
  • மாநில நிர்வாகத்தில் மற்ற மாநிலங்கள் தலையிடக் கூடாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Bacterial contamination found in drinking water at Coimbatore railway station.

கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி

ஆகஸ்ட் 18, 2026
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு

ஆகஸ்ட் 18, 2026
Annamalai 28 07 2026

விமர்சனங்களுக்கு வழக்கு, கைது என்ற போக்கை முதல்வர் தடுக்க வேண்டும்: அண்ணாமலை

ஆகஸ்ட் 18, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp