புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
No Result
View All Result
  • Login
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
AthibAn Tv | Tamil News

லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்

athibantv by athibantv
ஆகஸ்ட் 19, 2026
in Tamilnadu, Latest-news-tamil
A A
0
Chief Minister Vijai viewed the Thirumangai Alvar idol retrieved from London.
📢 WhatsApp Channel Join
👁️ 4.7K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்

லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டு, அரிய கலைப்பொருளை மீட்டுக் கொண்டு வந்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 1957 முதல் 1967-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை உள்ளிட்ட பல்வேறு உலோகச் சிலைகள் திருடப்பட்டன. இதுதொடர்பாக தமிழக சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Related posts

High Court Order

21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்

ஆகஸ்ட் 19, 2026
Possibility of heavy rain

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 19, 2026

விசாரணையின் போது, திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிலையின் பூர்வீகம் தொடர்பான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் புகைப்படச் சான்றுகளை சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திரட்டினர்.

திரட்டப்பட்ட ஆதாரங்கள் மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை மூலமாக இங்கிலாந்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், திருமங்கை ஆழ்வார் சிலையை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதித்தது.

இதைத்தொடர்ந்து தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 16-ம் தேதி திருமங்கை ஆழ்வார் சிலை பாதுகாப்பாக தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சிலையை மீட்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதனை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

தலைமைச் செயலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் காவல்துறை இயக்குநரும் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு அதிகாரியுமான டி.கல்பனா நாயக் ஆகியோர் மீட்கப்பட்ட சிலையை முதல்வர் விஜய்யிடம் காண்பித்தனர். அரிய கலைப்பொருளை மீட்டு கொண்டு வந்த அதிகாரிகளின் சிறப்பான பணியை முதல்வர் பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை நேற்று மாலை கும்பகோணம் சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அஸ்வினி மற்றும் செயல் அலுவலர் சுரேந்திர ராஜா ஆகியோர் சிலையை பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, கிராம மக்கள் திருமங்கை ஆழ்வார் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் கோயிலின் பாதுகாப்பு அறையில் சிலை வைக்கப்பட்டு பாதுகாப்பாக பூட்டப்பட்டது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்
  • 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • திமுக பாதையில் தவெக அரசு செல்கிறதோ? அண்ணாமலை கடும் விமர்சனம்
  • ஆகாஷ் கைது விவகாரம்: கழுத்தில் கயிறை போட்டு உயிர் போகும் அளவுக்கு இழுத்து துன்பப்படுத்தும் காவல்துறை… சமூக வலைதளங்களில் கேள்வி
  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
  • காவல் விசாரணையில் ஜோதிடர் உயிரிழப்பு: மதுரை மாநகர காவல் துறை விளக்கம்
  • இம்ரான் கானை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • கோவை உள்ளிட்ட ரயில் நிலைய குடிநீரில் ‘இ-கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையால் அதிர்ச்சி
  • அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்: அறக்கட்டளை புதிய ஏற்பாடு
Chief Minister Vijai viewed the Thirumangai Alvar idol retrieved from London.

லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்

ஆகஸ்ட் 19, 2026
High Court Order

21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்

ஆகஸ்ட் 19, 2026
Possibility of heavy rain

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

ஆகஸ்ட் 19, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© AthibAn TV
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp