புதன்கிழமை, ஆகஸ்ட் 19, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
No Result
View All Result
  • Login
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
AthibAn Tv | Tamil News

கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 19, 2026
in Crime, Latest-news-tamil, Political, Tamilnadu
A A
0
TVK functionary arrested for attempting to snatch a chain from a woman riding a scooter near Karur.
📢 WhatsApp Channel Join
👁️ 4.1K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது

கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்றதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர்-கோவை சாலை, என்எஸ்கே நகரைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா, கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வருந்தியாபாளையத்தில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக கரூரில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டுச் சென்றார்.

அவர் வேட்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், பிரியாவின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சுதாரித்துக்கொண்டு தனது ஸ்கூட்டரை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.

Related posts

Minister Aadav Arjuna

தமிழகத்தில் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்ட் 19, 2026
Arjuna Awards for 17 individuals, including Gayatri Gopichand and Divya.

காயத்ரி கோபிசந்த் உட்பட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

ஆகஸ்ட் 19, 2026

இதன் காரணமாக சங்கிலி அறுபடாமல் தப்பியதுடன், அந்த நபரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த பதிவுகளின் அடிப்படையில், சங்கிலியை பறிக்க முயன்ற நபர் தவெக புகழூர் நகரச் செயலாளரும், மூளிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவருமான நந்தகுமார் என்பது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நந்தகுமாரை போலீஸார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சங்கிலி பறிப்பு முயற்சி தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimePoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது
  • தமிழகத்தில் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
  • காயத்ரி கோபிசந்த் உட்பட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு
  • அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி: மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 3 சகோதரர்கள்
  • லண்டனில் இருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்
  • 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் தவறில்லை: உயர் நீதிமன்றம்
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
  • திமுக பாதையில் தவெக அரசு செல்கிறதோ? அண்ணாமலை கடும் விமர்சனம்
  • ஆகாஷ் கைது விவகாரம்: கழுத்தில் கயிறை போட்டு உயிர் போகும் அளவுக்கு இழுத்து துன்பப்படுத்தும் காவல்துறை… சமூக வலைதளங்களில் கேள்வி
  • முதல்வர் அலுவலக இடமாற்ற டெண்டரில் வெளிப்படைத்தன்மை இல்லை: நயினார் நாகேந்திரன்
TVK functionary arrested for attempting to snatch a chain from a woman riding a scooter near Karur.

கரூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயற்சி: தவெக நிர்வாகி கைது

ஆகஸ்ட் 19, 2026
Minister Aadav Arjuna

தமிழகத்தில் 2,000 கி.மீ. ஊரகச் சாலைகள் ரூ.2,550 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்ட் 19, 2026
Arjuna Awards for 17 individuals, including Gayatri Gopichand and Divya.

காயத்ரி கோபிசந்த் உட்பட 17 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு

ஆகஸ்ட் 19, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© AthibAn TV
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp