திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

திண்டுக்கல் அருகே மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆசிரியர் மீது தாக்குதல்: தவெக பிரமுகர் கைது

athibantv by athibantv
ஆகஸ்ட் 13, 2026
in Tamilnadu, Crime, Latest-news-tamil, Political
A A
0
TVK functionary arrested for creating a ruckus while intoxicated.
📢 WhatsApp Channel Join
👁️ 4.8K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

திண்டுக்கல் அருகே மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆசிரியர் மீது தாக்குதல்: தவெக பிரமுகர் கைது

திண்டுக்கல் அருகே மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மீது மதுபோதையில் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணக்கெடுப்பு விவரங்களை கேட்டதற்கு ஏற்பட்ட தகராறில், ஆசிரியர் தாக்கப்பட்டதுடன் அவரது செல்போனும் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நாடுகண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயலட்சுமி (40), லட்சுமணபுரம் கிராமத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாலமுருகன் (37) என்பவரது வீட்டுக்குச் சென்று கணக்கெடுப்புக்குத் தேவையான தகவல்களை கேட்டுள்ளார். இதற்கு பாலமுருகன் எதிர்ப்பு தெரிவித்து, தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

இதையடுத்து, அரசு உத்தரவின் அடிப்படையிலேயே கணக்கெடுப்புப் பணிக்கு வந்துள்ளதாக ஜெயலட்சுமி விளக்கி, தனது அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். இருப்பினும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் பாலமுருகன், அவரது விளக்கத்தை ஏற்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் திடீரென ஆசிரியர் ஜெயலட்சுமியின் செல்போனை பறித்ததுடன், அவரது முகத்தில் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஜெயலட்சுமியின் முகத்தில் ரத்தக் காயமும், முதுகில் உள்காயமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து அவர் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸார் விசாரணை

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். கைது நடவடிக்கையின்போதும், தான் தவெகவைச் சேர்ந்தவர் என்றும், தன்னையே போலீஸார் கைது செய்வதாகவும் கூறி அவர் தகராறில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பாலமுருகன் தவெக கட்சியில் நிர்வாகப் பொறுப்பில் உள்ளாரா என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர் கட்சியில் எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியர் சங்கம் கண்டனம்

ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கணக்கெடுப்பின்போது உண்மையான தகவல்களை வழங்கினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது அல்லது ரூ.1,000 உரிமைத்தொகை நிறுத்தப்பட்டுவிடும் என்ற அச்சம் சிலரிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே, கணக்கெடுப்பு தொடர்பான சந்தேகங்களை பொதுமக்களிடம் தெளிவுபடுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தாக்குதல் நடத்தியவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆசிரியர்கள் அச்சமின்றி களப்பணியில் ஈடுபடுவதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimePoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp