திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

இபிஎஸ் சுற்றுப்பயணத்தால் தாக்கமும் இல்லை, பயனும் இல்லை” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

athibantv by athibantv
செப்டம்பர் 2, 2025
in Tamilnadu
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.2K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

“இபிஎஸ் சுற்றுப்பயணத்தால் தாக்கமும் இல்லை, பயனும் இல்லை” – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

“தோல்வி அச்சத்தினால்தான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அந்தப் பயணத்தால் எந்த எழுச்சியும் உருவாகவில்லை; மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை” என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியின் இறுதி கட்டத்தை இன்று காலை அமைச்சர் சேகர்பாபுவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Related posts

BJP INDIA BJP

‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்

ஆகஸ்ட் 17, 2026
Gold worth ₹2 crore seized on a Chennai train.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

ஆகஸ்ட் 17, 2026

ஆய்வின்போது, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“இந்த குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 300 மாநகர பேருந்துகள், 600 எஸ்இடிசி பேருந்துகள், 50 கர்நாடக கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் மற்றும் 36 அண்டை மாநிலங்களின் பேருந்துகள் இயக்கப்படும்.

வார நாட்களில் சுமார் 30 ஆயிரம் பயணிகளும், விடுமுறை நாட்களில் 40 ஆயிரம் பயணிகளும், திருவிழா காலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளும் பயன்படுத்துவார்கள். இந்த நிலையம் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.”

அதிமுக தலைவர் பழனிசாமி மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

“அந்தச் சுற்றுப்பயணம் தோல்வி அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. மக்களிடம் எந்த ஈர்ப்பையும் உருவாக்கவில்லை; எந்த பயனும் தரவில்லை. ‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று கூறுவதற்குப் பதிலாக, ‘சம்பாதித்ததை காப்போம் – சம்மந்தியை மீட்போம்’ என்று சொல்லலாம்” என்றார்.

இந்த ஆய்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp