திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

போதைப்பொருள் புழக்கமே தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கிய காரணம்: பழனிசாமி

athibantv by athibantv
ஆகஸ்ட் 15, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Palaniswami’s plan
📢 WhatsApp Channel Join
👁️ 3.1K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

போதைப்பொருள் புழக்கமே தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கிய காரணம்: பழனிசாமி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே முக்கிய காரணமாக இருப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் நடமாட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கோவையில் கல்லூரி மாணவர் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துயரமானது என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். மாணவர் கொலை சம்பவத்தில் அரசு முழு கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை திருப்திகரமாக இல்லை என்றும், கடந்த சில ஆண்டுகளை விட தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வருவதாகவும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், தற்போதைய ஆட்சியின் குறுகிய காலத்திலேயே அரிசி விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும், டெல்டா விவசாயிகளின் கூட்டத்தையும் நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படுவதுடன், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காவிரி நீர் தொடர்பான விவகாரத்திலும் தமிழக அரசு தாமதமாக செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். ஜூன் மாதத்திலேயே காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்க வேண்டும் என்றும், ஆனால் ஆகஸ்ட் மாதத்தில்தான் அரசு வழக்கு தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

டெல்டா பகுதியில் நிலத்தடி நீரை நம்பி சுமார் 2 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ததாகவும், தண்ணீர் இல்லாததால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

தொடர்ந்து, தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்தார். கட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும், அதன் தலைவர் மக்களின் பிரச்சினைகளுக்காக நேரடியாக போராட்டங்களில் ஈடுபட்டாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும், தவெக அரசின் 100 நாள் ஆட்சி “ரீல்ஸ் ஆட்சி” போல இருப்பதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தொழில் முதலீட்டு மாநாடு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் முதலீடு செய்த நிறுவனங்கள், தற்போது தங்களது திட்டங்களை விரிவுபடுத்தியிருப்பதாகவும், இதனை புதிய முதலீடுகளாகக் காட்ட முடியாது என்றும் அவர் கூறினார். பெரிய அளவிலான புதிய முதலீடுகள் வந்ததாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, 11 நிறுவனங்களின் மதுபானங்களுக்கு டாஸ்மாக்கில் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தனக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது என்றும், அதனால் அது தொடர்பாக தனக்கு தெரியாது என்றும் கூறினார். பேட்டியின்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: AdmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp