திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

கர்நாடகாவில் குட்கா தடை உத்தரவை 24 மணி நேரத்தில் திரும்பப் பெற வேண்டும்: பாஜக எம்.பி. எச்சரிக்கை

athibantv by athibantv
ஆகஸ்ட் 14, 2026
in Political, India, Latest-news-tamil
A A
0
BJP MP Kedu urges Karnataka to lift ban on gutka sale
📢 WhatsApp Channel Join
👁️ 1.2K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

கர்நாடகாவில் குட்கா தடை உத்தரவை 24 மணி நேரத்தில் திரும்பப் பெற வேண்டும்: பாஜக எம்.பி. எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் குட்கா பொருட்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை 24 மணி நேரத்துக்குள் மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஷிவ்மோகா மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய்.ராகவேந்திரா கெடு விதித்துள்ளார். இல்லையெனில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அண்மையில் வெளியிட்ட உத்தரவில், மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் நிகோடின் கலந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு ஓராண்டு காலத்துக்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

இந்த உத்தரவின்படி, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்தல், பதுக்கி வைத்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி. பி.ஒய்.ராகவேந்திரா, மாநில அரசின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குட்கா விற்பனை மீதான தடையை அடுத்த 24 மணி நேரத்துக்குள் அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக போராட்டத்தை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தத் தடை உத்தரவு கர்நாடகத்தில் பாக்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என ராகவேந்திரா தெரிவித்தார். அரசு பிறப்பித்த தடை உத்தரவு அமலுக்கு வந்த ஒரே நாளிலேயே சந்தையில் பாக்கு விலை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குட்கா மீதான தடை உத்தரவு உண்மையில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் விமர்சித்தார். மக்களின் ஆரோக்கியத்தில் அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால், சிகரெட் மற்றும் மதுபான விற்பனைக்கும் தடை விதித்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் அரசு மாநிலத்தில் மதுபான விற்பனைக்கான உரிமங்களை அதிகரித்து வருவதுடன், மதுபானக் கடைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளதாக ராகவேந்திரா குற்றம்சாட்டினார். எனவே, ஆட்சியாளர்கள் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp