திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்: நயினார் நாகேந்திரன்

athibantv by athibantv
ஆகஸ்ட் 13, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Nainar Nagendran’s criticism
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் நிலை தொடர்வதாகவும், இதனைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் அவல நிலை தொடர்வது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஏரி, குளங்கள் வறண்டு போனதுடன், நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் குறைந்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதே மக்கள் குடிநீருக்காக தாகத்தில் தவிப்பதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் மக்களை மறந்துவிட்ட முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், இனியாவது அரசு விழித்துக்கொண்டு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தற்போது நிலவும் குடிநீர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே போர்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முறையாக சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், எதிர்கால குடிநீர் தேவையை சமாளிப்பதற்கும் நீர்நிலைகளை பாதுகாத்து, மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: BjpPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp