திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்

athibantv by athibantv
ஆகஸ்ட் 11, 2026
in Political, India, Latest-news-tamil
A A
0
Rahul Gandhi RTY789
📢 WhatsApp Channel Join
👁️ 792 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் ராகுல் காந்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது காவல்துறை சார்பில் முட்கள் பதிக்கப்பட்ட லத்திகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பல மாணவர்களுக்கு எலும்பு முறிவு, வெட்டுக் காயம் மற்றும் சிராய்ப்புகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

மேலும், பிஹாரின் சியான் நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போதும் பல போராட்டக்காரர்கள் காயமடைந்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார். ஏ.கே-47 உள்ளிட்ட துப்பாக்கிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளை உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி காவல்துறை மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். போராட்டம் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டெல்லி காவல்துறை மற்றும் விரைவு அதிரடிப் படை ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுபவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சரின் அனுமதி இருந்திருக்கலாம் அல்லது அவருக்கு சம்பவம் குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம் என இரண்டு சாத்தியக்கூறுகளை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். அனுமதி வழங்கியிருந்தால் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், தெரியாமல் இருந்திருந்தால் அது நிர்வாகத் திறமையின்மையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

எந்த சூழ்நிலையாக இருந்தாலும், உள்துறை அமைச்சராக சம்பவத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இளைஞர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றும், இளைஞர்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Congress-NEWSIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp