திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ரகுபதி விமர்சனம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 7, 2026
in Political, Latest-news-tamil, Tamilnadu
A A
0
“The ‘Annan Seer’ scheme cannot be implemented at a cost of ₹832 crore” – Raghupathy
📢 WhatsApp Channel Join
👁️ 711 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

ரூ.832 கோடியில் ‘அண்ணன் சீர்’ திட்டத்தை செயல்படுத்த முடியாது: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ரகுபதி விமர்சனம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் போது, ‘அண்ணன் சீர்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக எம்எல்ஏ ரகுபதி கேள்வி எழுப்பினார். ரூ.832 கோடி ஒதுக்கீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும், இதற்கான நிதி போதாது என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய ரகுபதி, நிதிநிலை அறிக்கையில் மக்களின் வரிப்பணத்தை முறையாக பயன்படுத்துவோம் என்று அரசு தெரிவித்துள்ளதை குறிப்பிட்டார். மேலும், ‘வெற்றி 150 நாள் திட்டம்’ மூலம் மத்திய அரசிடம் தமிழக அரசு சரணடைந்து விட்டதாக விமர்சித்த அவர், தேர்தலில் அமைதியாக வந்ததைப் போலவே தற்போது மத்திய அரசின் முன்பும் அமைதியாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

நிதியமைச்சர் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்ததாகவும், வேளாண்மை அமைச்சர் திருப்பதி சென்று வழிபாடு செய்துவிட்டு லட்டு மற்றும் புளியோதரையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்ததாகவும் ரகுபதி குறிப்பிட்டார். அண்ணாவின் கொள்கையான “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற வழியில் திமுக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சுட்டிக்காட்டிய ரகுபதி, மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம் போன்ற திட்டங்களில் திமுக அரசு மக்களுடன் இருப்பதாக கூறினார். ‘விடியல்’ என்ற வார்த்தை பிடிக்காததால் சில திட்டங்களில் இருந்து அது நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

‘அண்ணன் சீர்’ திட்டம் தொடர்பாக பேசிய அவர், ரூ.832 கோடி நிதியில் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றார். இந்த திட்டத்தின் கீழ் 2 முதல் 3 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் எனக் கூறிய அவர், தற்போதைய தங்கம் மற்றும் பொருட்களின் விலை உயர்வை கணக்கில் எடுத்தால் கூடுதல் நிதி தேவைப்படும் என தெரிவித்தார்.

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், புடவை உள்ளிட்ட பொருட்களின் விலையையும் சேர்த்து கணக்கிட்டால், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான உதவியை ரூ.1 லட்சமாக குறைத்தாலும் கூட திட்டத்தை செயல்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி வரை தேவைப்படும் என ரகுபதி கூறினார்.

மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், மின் கட்டண உயர்வு மற்றும் மகளிருக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் வாக்குறுதி உள்ளிட்ட விவகாரங்களையும் அவர் எழுப்பினார். மின்சார வசதி மற்றும் அரசு உதவித் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் ரகுபதி தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: dmkPoliticalTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp