திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள தாளையூத்து ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்த தவெக நிர்வாகி மணிகண்டன், ஊராட்சி செயலரை நிற்க வைத்து ‘செல்ஃபி’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழநி அடுத்த தாளையூத்து கிராமத்தில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் கூறி, குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன் தாளையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்றார். அங்கு ஊராட்சி செயலர் தண்டபாணியிடம் குடிநீர் பிரச்சினை குறித்து அவர் கேட்டறிந்ததுடன், அலுவலகத்தில் இருந்த கோப்புகளையும் பார்வையிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, மணிகண்டன் நாற்காலியில் அமர்ந்திருக்க, ஊராட்சி செயலர் தண்டபாணி அருகில் நின்றபடி இருந்துள்ளார். இந்த காட்சியை அவருடன் சென்ற ஆதரவாளர் ஒருவர் ‘செல்ஃபி’ புகைப்படமாக எடுத்துள்ளார். பின்னர் அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என ஏற்கெனவே கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், அந்த உத்தரவை மீறி தவெக நிர்வாகி ஒருவர் ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதுடன், அதனை ‘செல்ஃபி’ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழநி அருகே ஊராட்சி அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு: ‘செல்ஃபி’ வெளியிட்டதால் சர்ச்சை