திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவில் மோசடி: 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை

athibantv by athibantv
ஆகஸ்ட் 15, 2026
in India, BIGNEWS, Crime, Latest-news-tamil, Spirituality
A A
0
Tirupati Devasthanam issues warning.
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

திருப்பதி ஏழுமலையான் தரிசன முன்பதிவில் மோசடி: 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் போலி இணையதளங்கள், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களை உருவாக்கி பக்தர்களிடம் மோசடி நடைபெற்று வருவதாக தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ரவி நேற்று வெளியிட்ட அறிக்கையில், பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம், தங்கும் விடுதிகள் மற்றும் ஆர்ஜித சேவைகளுக்கான முன்பதிவு என்ற பெயரில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளங்கள் மட்டுமின்றி, திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் போலியான தகவல்கள் பகிரப்பட்டு பக்தர்கள் ஏமாற்றப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

எனவே, தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவஸ்தானத்தின் பெயர், சின்னம் அல்லது சமூக வலைதள அடையாளங்களை போலியாக பயன்படுத்தி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தேவஸ்தானத்தின் பெயரில் செயல்பட்ட 259 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தி தேவையான சேவைகளைப் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், முன்பின் அறிமுகமில்லாத நபர்களின் பேச்சை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeIndiaSpirituals

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp