திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

சென்னை மெரினாவில் நேபாள இளைஞர் மர்ம மரணம்; கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

athibantv by athibantv
ஆகஸ்ட் 14, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Continuing custodial deaths in Tamil Nadu
📢 WhatsApp Channel Join
👁️ 2.7K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

சென்னை மெரினாவில் நேபாள இளைஞர் மர்ம மரணம்; கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், கொலையாளிகளை கண்டறிந்து கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் பின்புறம் உள்ள கல்லுக்குட்டை பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

அங்கு ரத்தக் காயங்களுடன் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் உயிரிழந்து கிடந்த இடத்தில் இருந்த மதுபாட்டில்கள், செல்போன் மற்றும் கைப்பை உள்ளிட்ட பொருள்களையும் போலீஸார் கைப்பற்றி விசாரணைக்கு உட்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் சகா (27) என்பது தெரியவந்துள்ளது. இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் தங்கி, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீராம் சகாவின் உடலில் பல்வேறு ரத்தக் காயங்கள் காணப்பட்டதால், அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டாரா அல்லது மெரினா பகுதியில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி கொலை செய்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறியும் வகையில் போலீஸார் அப்பகுதியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp