திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: 10 பேர் கைது; காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 14, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
Arrest 56789
📢 WhatsApp Channel Join
👁️ 4.9K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: 10 பேர் கைது; காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 10 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், சட்டவிரோத லாட்டரி விற்பனையைத் தடுக்கத் தவறியதாக கூறி மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சட்டவிரோத லாட்டரி விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

இந்த நிலையில், மன்னார்குடி நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மன்னார்குடி நகர் பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், மன்னார்குடி மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் கார்த்திகேயன், நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அருளானந்தம், ருக்மணி, குளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சசி, அன்புக்கரசு, சுரேஷ் ஆகிய 10 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மடிக்கணினிகள், ஒரு ஐபோன், 12 ஆண்ட்ராய்டு செல்போன்கள், நான்கு ஆட்டோக்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.63 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, மன்னார்குடி பகுதியில் சட்டவிரோத லாட்டரி விற்பனையைத் தடுக்கத் தவறியதாக கூறி, மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் ராஜ் கமலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டிஐஜி ஜியா உல்ஹக் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த தனிப்படை போலீஸாரின் நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் வெகுவாகப் பாராட்டினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp