திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

விரைவில் பணக்காரனாக ஆசை: சென்னையில் நகைக்கடை மற்றும் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற அசாம் இளைஞர் கைது

athibantv by athibantv
ஜூலை 20, 2026
in Crime, Latest-news-tamil, Tamilnadu
A A
0
crime cheennai
📢 WhatsApp Channel Join
👁️ 1.8K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

விரைவில் பணக்காரனாக ஆசை: சென்னையில் நகைக்கடை மற்றும் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற அசாம் இளைஞர் கைது

சென்னை கொளத்தூர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த நகைக்கடைத் திருட்டு மற்றும் ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவங்களில் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற பேராசையினால் இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாகக் காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026

சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த குமரன் என்பவர், கொளத்தூர் வேலவன் நகரில் பழைய தங்க நகைகளை வாங்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ம் தேதி இரவு வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற அவர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டப் பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளான 18-ம் தேதி அதிகாலை, கொளத்தூர் பாரதி நகரில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த நபர், இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தின் பணப்பெட்டியை உடைக்க முயன்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் முயன்றும் பணப்பெட்டியை உடைக்க முடியாததால், ஆத்திரத்தில் அங்குள்ள மின்காந்த பூட்டு மற்றும் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சாதனங்களைச் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்கள் குறித்து கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரு கொள்ளை முயற்சிகளிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது உறுதியானது. இதையடுத்து நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலில், கொளத்தூர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பீம் பகதூர் சேத்ரி (27) என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: CrimeTamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
  • கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Bangladesh team achieves a historic victory by defeating Australia on their home soil!

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp