திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை – பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

athibantv by athibantv
செப்டம்பர் 2, 2025
in Tamilnadu
A A
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை – பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, மதியம் 11.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் அவர் வந்தடைகிறார். அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Related posts

BJP INDIA BJP

‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்

ஆகஸ்ட் 17, 2026
Gold worth ₹2 crore seized on a Chennai train.

பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

ஆகஸ்ட் 17, 2026

பின்னர், மதியம் 12.10 மணிக்கு காரில் புறப்பட்டு, 12.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையம் சென்று, சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அதன் பின், மதியம் 1.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, 1.35 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வந்து ஓய்வு எடுக்கிறார்.

நாளை (செப்டம்பர் 3) காலை 9.20 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்டு, 9.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்றடைவார். பின்னர், ஹெலிகாப்டரில் திருவாரூருக்கு புறப்படுகிறார்.

திருவாரூரில் உள்ள நீலக்குடி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். அதன் பின், ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் சென்று, ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

அங்கிருந்து திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, டெல்லி திரும்புகிறார்.

குடியரசுத் தலைவர் பயணத்தை முன்னிட்டு, சென்னை பழைய விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விமான நிலைய உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, உளவுத்துறை அதிகாரிகள், வி.ஐ.பி. பாதுகாப்பு பிரிவு, சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சென்னை, திருச்சி விமான நிலையங்கள் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் உட்பட குடியரசுத் தலைவர் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamilnadu

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp