திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த மறுவரையறையையும் ஏற்க முடியாது: கார்த்தி சிதம்பரம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 9, 2026
in Political, India, Latest-news-tamil
A A
0
Karti Chidambaram
📢 WhatsApp Channel Join
👁️ 4.7K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த மறுவரையறையையும் ஏற்க முடியாது: கார்த்தி சிதம்பரம்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்றும், தமிழக உரிமைக்கு எதிரான எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக தங்களுக்காக கவலைப்படத் தேவையில்லை என்றும், தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதே தங்களது முக்கிய கவலை என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், முதல்வர் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் வெளிப்படையான விவாதம் நடைபெற்றதாக தெரிவித்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களது நிலைப்பாடுகளை தெளிவாக எடுத்துரைத்ததாகவும், தொகுதி மறுவரையறை விவகாரத்தை சாதாரணமான ஒன்றாகக் கருதக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை பாதுகாக்கப்பட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார். மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் என்றும் அவர் கூறினார். அதற்கு மாற்றாக அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டாலும், அந்த முறையும் தமிழகத்துக்கு சாதகமாக அமையாது என அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 800-க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டால் அதன் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார். தற்போதைய நிலையிலேயே எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை என்றும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் வந்து கைதட்டி விட்டு கலைந்து செல்லும் இடமாக மாறாமல், பயனுள்ள விவாதங்கள் நடைபெறும் அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார். அமெரிக்காவில் மக்கள்தொகை அதிகரித்த போதிலும் பிரதிநிதிகள் சபையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என்றும், தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் ஆகியோர் 543 என்ற எண்ணிக்கையை பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் உரிமைக்கு எதிரான எந்தவொரு தொகுதி மறுவரையறை முறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதனை ஆதரிப்பது தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதாகவே கருதப்படும் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். மேலும், தொகுதி மறுவரையறையின் போது தொகுதிகளின் எல்லைகள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அரசியல் ரீதியாக சாதகமான பகுதிகளை ஒன்றிணைப்பது அல்லது குறிப்பிட்ட பகுதிகளை பல தொகுதிகளாகப் பிரிப்பது போன்ற ‘ஜெரிமாண்டரிங்’ நடவடிக்கைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

காவிரி நீர் பிரச்சினை குறித்துப் பேசிய அவர், நீரை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே இருப்பதாக தெரிவித்தார். காவிரி மேலாண்மை அமைப்பு வழங்கியுள்ள உத்தரவுகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும், அதில் யாருக்கேனும் உடன்பாடு இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். மேகேதாட்டு அணை இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை என்றும், அங்கு தண்ணீர் தேக்கப்படவும் இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், இது உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை அல்ல என்றாலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய விவகாரம் எனக் கூறினார். அதே நேரத்தில் காவிரி நீர் தொடர்பான உடனடி பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நாடுவதற்கும் உரிமை இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சட்டப்பேரவை தொடர்பான விவகாரங்களை தான் கவனிப்பதில்லை என்றும், மக்களின் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதே முக்கியம் என்றும் அவர் கூறினார். உதயநிதி பேசியதற்காகவும், அவரை கைது செய்ததற்காகவும் நடவடிக்கை எடுத்தது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பாஜகவை யாரும் கவனிப்பதில்லை என்றும், தேர்தலுக்குப் பிறகு சீமான் காரைக்குடிக்கு திரும்பி வரவில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் விமர்சித்தார். காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினால் காங்கிரஸ் வருத்தப்படும் என்பதற்காகவே முதல்வர் தொகுதி மறுவரையறை கூட்டத்தை நடத்தியதாக கனிமொழி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களுக்காக திமுக கவலைப்பட வேண்டாம்; தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதுதான் எங்களது கவலை” என்று தெரிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Congress-NEWSIndiaPolitical

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp