திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

நீட் தேர்வு ரத்து, எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

athibantv by athibantv
ஆகஸ்ட் 12, 2026
in Latest-news-tamil, Political, Tamilnadu
A A
0
Separate resolutions passed in the Assembly
📢 WhatsApp Channel Join
👁️ 1.8K Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

நீட் தேர்வு ரத்து, எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ.) திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரு தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம்

சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை தொடங்கியதும், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் தேர்வு தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை இந்தத் தேர்வு முறை பெரிதும் பாதிப்பதாகவும் அவர் கூறினார்.

Related posts

Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

பள்ளியில் 12 ஆண்டுகள் மாணவர்கள் கற்கும் கல்வியை விட, ஒரே நாளில் நடைபெறும் ஒரு நுழைவுத் தேர்வு அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது கல்வியின் உண்மையான நோக்கத்துக்கும் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்துக்கும் முரணானது என அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு முறையில் தனியார் பயிற்சி மையங்களே அதிகளவில் பயனடைவதாகவும், சமூக நீதியை பாதிக்கும் மற்றும் சம வாய்ப்புகளை குறைக்கும் எந்தத் தேர்வு முறையையும் ஏற்க முடியாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

தமிழகம் நீண்ட காலமாக 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடைமுறைப்படுத்தி, நாட்டிலேயே முன்னோடியான பொது சுகாதார கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, மத்திய சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு நீட் தேர்வு முறையை ரத்து செய்து, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மீது பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், ஏ.வ.வேலு உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துப் பேசினர். திமுகவைச் சேர்ந்த வி.முத்துராஜா, அதிமுகவைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.செல்லசுவாமி, பாமகவின் சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் தீர்மானத்தை ஆதரித்தனர். பாஜக உறுப்பினர் போஜராஜன் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டமான எஃப்.சி.ஆர்.ஏ.வில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஃப்.சி.ஆர்.ஏ. விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்த மசோதா தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகக் கூறினார். அமைச்சர் வன்னியரசு, சிறுபான்மையினரை பாதிக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த மசோதா இருப்பதாக விமர்சித்தார். எஸ்.ஆஸ்டின், இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெளிநாட்டு நிதி மீதான கட்டுப்பாடுகளை வரவேற்பதாகவும், சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான திருத்தங்களைச் செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். பாஜக உறுப்பினர் எம்.போஜராஜன், தேசத்திற்கு எதிரான செயல்களைத் தடுக்கும் நோக்கிலேயே எஃப்.சி.ஆர்.ஏ. சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாகக் கூறி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மமகவைச் சேர்ந்த எம்.எச்.ஜவாஹிருல்லா, வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை வங்கிக் கணக்குகள் மூலம் கண்காணிக்க முடியும் என்றும், எஃப்.சி.ஆர்.ஏ. சட்டம் சிறுபான்மையினரை மட்டுமின்றி கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரையும் பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஆர்.செல்லசுவாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.மாரிமுத்து, தேமுதிகவைச் சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தீர்மானத்திற்கு ஆதரவாகப் பேசினர்.

எஃப்.சி.ஆர்.ஏ. திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamilnaduTVK-NEWS

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp