தென்காசி கோயில் நிலத்தில் 10 டன் கழிவுகள்: கேரள அரசைக் கண்டித்து நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
தென்காசி கீழக்கடையத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தில் 10 டன் எடையுள்ள கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டதற்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைக் குப்பைத் தொட்டியாக நினைக்கும் அண்டை மாநிலத்தின் போக்கையும், எல்லைக் கண்காணிப்பில் தவறி அதைக் தடுக்கத் தவறிய தவெக அரசின் மெத்தனப் போக்கையும் அவர் தனது எக்ஸ் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார்.
அங்கு வீசப்பட்ட மூட்டைகளில் மலையாள எழுத்துகளும் வாகன எண்களும் உள்ள நிலையில், பிளாஸ்டிக் மற்றும் காலாவதியான மருந்துகளால் ஜம்பு நதியும் நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த 10 டன் கழிவுகளையும் உடனடியாகக் கேரளாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



