திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17, 2026
  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact
AthibAn Tv | Tamil News
  • Home
  • அண்மை
  • அரசியல்
  • க்ரைம்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்
  • Store
No Result
View All Result
  • Login
AthibAn Tv | Tamil News

ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் சுயசார்பு இந்தியாவின் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்

athibantv by athibantv
ஜூலை 27, 2026
in India, Latest-news-tamil
A A
0
Modi all india
📢 WhatsApp Channel Join
👁️ 3.3K 🔥 Facebook X WhatsApp Telegram Threads Pinterest Email

ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் சுயசார்பு இந்தியாவின் பெருமை: பிரதமர் மோடி புகழாரம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல், நாட்டின் சுயசார்பு முயற்சிகளுக்கு மிகப்பெரிய அடையாளமாக திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Related posts

Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் “மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சியின் 136-வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கார்கில் வெற்றி தினத்தை நினைவுகூர்ந்து, நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

கார்கில் போரின் போது உயரமான மலைப் பகுதிகள், கடும் குளிர் மற்றும் எதிரிகளின் சவால்களை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய கடற்படையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பல் முழுமையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இது சுயசார்பு இந்தியாவின் வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும், சமீபத்திய இந்தோனேசியா பயணத்தின் போது இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி தொடர்பான முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருவதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், பருவமழை காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், கிளாஸ்கோவில் தொடங்கிய காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சாதனைகள் படைத்து வருவதாகவும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கனவு காணும் பழக்கத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விதைத்தவர் கலாம் என்றும், ஆசிரியர் பணியை அவர் மிகவும் நேசித்தார் என்றும் நினைவுகூர்ந்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் “வீடு தோறும் தேசியக் கொடி” இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கான புதிய சிந்தனைகள் மற்றும் கருத்துகளை மக்கள் mygov இணையதளம் மூலம் பகிர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: IndiaModi

பிரபலமான பதிவுகள்

📰 அண்மை 🏛️ அரசியல் 💼 வணிகம் 🏆 விளையாட்டு 🎬 சினிமா 🌴 தமிழ்நாடு 🇮🇳 இந்தியா 🌍 உலகம் 🕉️ ஆன்மிகம் 💻 தொழில்நுட்பம் 🌿 வாழ்வியல் 🎓 கல்வி ✈️ சுற்றுலா 🚨 க்ரைம் 🎭 தென்னிந்திய சினிமா 🎞️ பாலிவுட் 🎥 ஹாலிவுட் 🌎 உலக சினிமா

அண்மை செய்தி

  • அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்
  • சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு
  • ‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்
  • ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று டெஸ்ட் வெற்றி
  • உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் வைல்டுபெரிஸ் நிறுவனத்தின் 7 குடோன்கள் தீக்கிரை
  • ‘வந்தே மாதரம்’ விவகாரம்: சோனியா காந்தியை கண்டித்து சென்னையில் பாஜக இளைஞரணி போராட்டம்
  • வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தல்
  • பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
  • ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ தீவிர விசாரணை: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு
  • அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து
Yellow attire is mandatory for priests at the Ayodhya Ram Temple.

அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்: மஞ்சள் உத்தரீயம் கட்டாயம்

ஆகஸ்ட் 17, 2026
Harsimrat Kaur’s allegation

சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதல் அரசியல் சதி: ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 17, 2026
Union Minister Kiren Rijiju’s remarks

‘திமாகி நக்சல்’ என்ற வார்த்தை எதிர்க்கட்சிகளை குறிக்கவில்லை: கிரண் ரிஜிஜு விளக்கம்

ஆகஸ்ட் 17, 2026
Dina AthibAn Logo

Made with ❤️ by Dina AthibAn

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம்.

நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

© Dina AthibAn (AthibAn TV)
All Rights Reserved.

  • Home
  • Store
  • About
  • Terms 
  • Privacy Policy
  • Corrections Policy
  • Editorial Policy
  • Contact

Designed by AthibAn Corp

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Store
  • அண்மை
  • வணிகம்
  • விளையாட்டு
  • க்ரைம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • BIGNEWS
  • ஆன்மீகம்

Designed by AthibAn Corp